100 கோடிக்கும் அதிகமான கொரொனா தடுப்பூசிகளை சீனா செலுத்தியது..!
உலகிலேயே முதல் நாடாக 100 கோடிக்கும் அதிகமான கொரொனா தடுப்பூசிகளை செலுத்திய நாடு என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. சீனாவில் சினோஃபார்ம், சினோபாக் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இரண்டு டோசாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை 100 கோடியே 4 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட இருப்பதாக சீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் மக்கள் தொகை 160 கோடியாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடுவது என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் இதுவரை 250 கோடி பேர் தடுப்பூசி போட்டு உள்ள நிலையில் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.







