--- --:--:-- --

மகனை கட்டையால் அடித்துக் கொலை செய்த தாய், தந்தை..!

10

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பெற்ற மகனை கட்டையால் அடித்துக் கொலை செய்த தாய், தந்தையை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்குளி சிட்கோ பகுதியை சேர்ந்த செல்வராஜ் சாந்தாமணி தம்பதியினரின் மகன் மணிகண்டன்.

 

வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். மேலும் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பெற்றோரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம்போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த மணிகண்டன் தமது தாய் மற்றும் தந்தையுடன் ரகளையில் ஈடுபட்டு படுத்து உறங்கியுள்ளார்.

 

அப்பொழுது தனது மகள் என்றும் கூட பாராமல் அவரது பெற்றோர் கட்டையால் அடித்து கொலை செய்ததாக தெரிகிறது. இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon