--- --:--:-- --

கேரளாவில் இன்று முதல் ஐந்து பேருக்கு மேல் கூட தடை..!

6

கேரளாவில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து இன்று முதல் ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்க ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

கேரளாவில் கொரொனா தினசரி பாதிப்பு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் 15 ஆயிரத்தை கடக்க வாய்ப்பு இருப்பதாக கேரள சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு துரிதப்படுத்தியுள்ளது.

 

இது குறித்த ஆலோசனையில் பொது முடக்கம் வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் முடிவெடுத்த நிலையில் கொரோனா விதிகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தங்க கடத்தல், லைஃப் மிஷன் திட்ட முறைகேடுகளை கண்டித்து நடந்த போராட்டங்கள் நிறுத்தப்பட்டன.

 

தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப 144 தடை உத்தரவைப் பிறப்பிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கி கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.

 

இதை தொடர்ந்து கொரொனா பரவலைத் தடுக்க எர்ணாகுளம் கோட்டயம் மற்றும் தலைநகர் திருவனந்தபுரத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon