தீபாவளி சிறப்பு பேருந்துகளில் மூன்று நாட்களில் 2 லட்சத்து 84 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயணம்..!
தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகளில் மூன்று நாட்களில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 605 பேர் பயணித்து இருப்பதாக போக்குவரத்து கழக இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் முதல் இன்று காலை 9 மணி வரை 6,039 பேருந்துகள் இயக்கப்பட்டு இருப்பதாகவும் அவற்றில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 605 பேர் பயணித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 89 ஆயிரத்து 480 பயணிகள் பயணம் செய்ய முன்பதிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.






