--- --:--:-- --

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு…. சூப்பர் ஸ்டார் வெளியிட்ட வீடியோ… அரசியலில் பரபரப்பு!

BJP victory 04

பாஜக வேட்பாளர் ஸ்ரீதரன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தலா ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வீடியோ வெளியிட்டுள்ளார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தமிழகத்தை போலவே அண்டை மாநிலமான கேரளாவிலும், சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் எதிரெதிர் துருவங்களாக போட்டியிடுகின்றன. பாஜக தனித்து களம் காண்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் ஒரு இடத்தை மட்டுமே வென்ற பாஜக, கேரளாவில் இந்தமுறை பெரிய அளவில் தடம் பதிக்க முயன்று வரும் நிலையில், இந்தியாவின் மெட்ரோ மேன் என புகழப்படும் ஸ்ரீதரனை தனது முதல்வர் வேட்பாளராக அறிவித்து களம் காண்கிறது ஸ்ரீதரன் பாலக்காடு தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவும், காங்கிரஸ் வேட்பாளருமான ஷாஃபி பரம்பில் என்பவரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டாரான நடிகர் மோகன்லால், பாஜகவின் பாலக்காடு வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரனை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

இதேபோல், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒருவருக்கும், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவருக்கும் ஆதரவு தெரிவித்து நடிகர் மோகன்லால் பேசியுள்ளார். அதாவது எந்த கட்சிக்கும் பகைமை வளர்த்துக் கொள்ளாமல் 3 முக்கிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவருக்கு மோகன்லால் ஆதரவு தெரிவித்துள்ளார். இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon