--- --:--:-- --

இஸ்லாமியர்களுக்கு மிலாது நபி வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்

5

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மிலாது நபி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: நபிகள் நாயகத்தின் பிறந்தநாளினைக் கொண்டாடிடும் அன்புக்குரிய இசுலாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் எனது மிலாது நபி வாழ்த்துகள்! உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையோடு நடத்துதல் என உலகத்துக்கு என்றென்றும் தேவையான நற்கருத்துகளைப் போதித்த உயர்ந்த உள்ளமாகத் திகழ்ந்தவர் அண்ணல் நபி அவர்கள்.

 

அவரது போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்திடும் இசுலாமிய உடன்பிறப்புகளின் உரிமைகளுக்கும், நலனுக்கும் என்றும் உழைத்திடும் அரசாகக் கழக அரசு ஒவ்வொரு முறை ஆட்சியமைக்கும் போதும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Right Menu Icon