மாணவர்களை அடித்ததாக புகார் – கணித ஆசிரியர் பணியிடை நீக்கம்!
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் மாணவர்களை அடித்து காயம் ஏற்படுத்திய புகாரின் பெயரில் அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அலங்காரி ஊர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் கணித ஆசிரியர் செல்வராஜ் பாடம் நடத்தும்போது மாணவர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார். உரிய பதில் அளிக்காத நிலையில் கோபம் அடைந்த செல்வராஜ் மாணவர்களை பிரம்பால் அடித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆசிரியர் செல்வராஜை பவானி மாவட்ட கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் செய்த நிலையில் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர்.





