--- --:--:-- --

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!

1

சீனாவில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்கப் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால், பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். பின்னர் இதற்குத் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டது. அதன் பின்னரே மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

 

இந்நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. LF.7 மற்றும் NB.1.8.1 என்ற புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வகை தொற்றால் பெரிய பாதிப்புகள் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.

 

தேசிய அளவில் 5,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், 4,724 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, கேரளாவில் 1,679 பேர், குஜராத்தில் 615 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் 221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Right Menu Icon