அரசு மருத்துவமனையில் சேர்த்து பிரசவம் பார்த்து ஆண் குழந்தை பெற்றெடுத்த மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன்
16 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்தாலும், பொதுமக்களுக்கு முன் உதாரணமாக,தனது மனைவியை அரசு மருத்துவமனையில் சேர்த்து பிரசவம் பார்த்து ஆண் குழந்தை பெற்றெடுத்த மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.நாகராஜன், கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில், மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த ஒரு வருடமாக சிறப்பான முறையில் மிகவும் எளிமையாக தனது பணியை செய்து வருகிறார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணமான, மானாமதுரை எம்எல்ஏ நாகராஜனுக்கு திருமணமாகி 16 ஆண்டுகளாக குழந்தையின்றி இருந்து தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது 16 வருடங்களுக்குப் பிறகு கருவுற்ற தனது மனைவிக்கு,தொடகத்தில் இருந்து பிரசவிக்கும் வரை,தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல், மானாமதுரை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் தனது மனைவி சிவசங்கரிக்கு, மகப்பேறு காலத்தில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார், மானாமதுரை எம்எல்ஏ எஸ்.நாகராஜன்.
மேலும் தனியார் மருத்துவமனையை தேடி விரும்பிச் சென்று பல கர்ப்பிணிப் பெண்கள் பிரசவம் பார்த்து வரும் இந்த காலகட்டத்தில்,16 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்தாலும், பொதுமக்களுக்கு முன் உதாரணமாக தான் இருக்க வேண்டும் என்பதற்க்காக, அரசு மருத்துவமனையில் தான் தனது மனைவிக்கு பிரசவம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்,சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் மனைவி சிவசங்கரிக்கு கடந்த 9 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மேலும் இதே சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி குழந்தைகள் பிரிவு வார்டு அருகில் தான், கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையும் பெரிதாக பொருட்படுத்தாமல் மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் தனது மனைவியை பிரசவத்திற்கு அனுமதித்துள்ளார். இந்த நிகழ்வு பொது மக்களிடையே அரசு மருத்துவமனையின் மீது உள்ள நம்பிக்கையை பலப்படுத்தியுள்ளது.
கடந்த 9 ஆம் தேதி பிறந்த மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் குழந்தை தற்போது தாய் சேய் இருவரும் இன்று நலமுடன் வீடு திரும்பினர்.






