நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது..!
15 வயதான சிறுமியை திருமணம் செய்த நபர் நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய அத்துமீறிய நபர் என மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் உசேன். இவர் குரோம்பேட்டையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
ஏற்கனவே திருமணமான இவர் 15 வயதான சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். மேலும் தன் நண்பரின் வீட்டிற்கு அருகே இவர்கள் வசித்து வந்தனர். நண்பனின் மனைவி மீது ஈர்ப்பு ஏற்படவே அந்த சிறுமி குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை காட்டி அந்த சிறுமியிடம் அத்து மீறியுள்ளார். இதனை அந்த பெண் போலீசாரிடம் தெரிவிக்கவே அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியை திருமணம் செய்தவரும் கைது செய்யப்பட்டார்.





