--- --:--:-- --

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பாலாத்காரம் செய்தவன் கைது!

14

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மனநலம் குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவனை கைது செய்துள்ள போலீசார் மற்றொருவனை தேடி வருகின்றனர். கொசூரை சேர்ந்த 25 வயதான அந்த பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மனநலம் பாதிக்கப்பட்டதால் கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

 

கடந்த 17ஆம் தேதி மாலை விறகு வெட்டுவதற்காக காட்டிற்கு சென்ற அந்த பெண்ணை பலவந்தமாக தூக்கிச் சென்று இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு விசாரித்த உறவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் இறங்கிய போலீசார் கீரனூரை சேர்ந்த கணேஷ் என்பவரை கைது செய்தனர் மற்றொருவனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon