--- --:--:-- --

மகேஷ் பாபுவுக்கு இன்னும் சில தினங்களில் மூட்டு அறுவை சிகிச்சை

2

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ்பாபுவுக்கு மூட்டு அறுவைசிகிச்சை இன்னும் சில தினங்களில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2014ஆம் ஆண்டில் வெளியான ஒரு திரைப்பட படப்பிடிப்பின்போது மூட்டில் ஏற்பட்ட காயத்தினால் மகேஷ்பாபு நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்ததாகவும், இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் மகேஷ்பாபு தனது குடும்பத்துடன் ஓய்வெடுக்க தற்போது சென்றுள்ளார். அதனால் அமெரிக்காவில் வைத்து அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதா அல்லது ஹைதராபாத் திரும்பிய பிறகு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

Leave a Reply

Right Menu Icon