ஆடுகளை கடித்துக்கொன்ற வெறி நாய்கள்..!
சங்கரன்கோவில் அருகே ஆட்டு கொட்டகையில் புகுந்து வெறிநாய்கள் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். அவரது ஆட்டுக் கொட்டகைக்குள் நள்ளிரவில் புகுந்த வெறி நாய்கள் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறி கொன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள விவசாயி பாண்டியராஜ் மாவட்ட நிர்வாக ஆய்வு செய்து உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.






