--- --:--:-- --

காஞ்சிபுரம் மாவட்டத்தில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளை?

12

லண்டனில் உள்ள புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் முதலமைச்சர் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ் ,அரசு அதிகாரிகள், கிங்ஸ் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளையை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Right Menu Icon