--- --:--:-- --

கொரொனா தொற்றில் இருந்து மீண்ட சின்னத்திரை தம்பதி..!

2

கொரொனா பாதித்த நபர்களுக்கு சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மிகவும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாக சின்னத்திரை தம்பதிகளான ராஜ் கமல், லதா ராமன் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு நலம் அடைந்த பின்னர் அவர்கள் இருவரும் கூட்டாக வெளியிட்ட வீடியோ பதிவு வைரலாகிறது. தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பான சிகிச்சைகளை பட்டியலிட்டனர்.

 

தனியார் மருத்துவமனைகளை விட மேலாக எந்த கட்டணமும் இன்றி சிறப்பான சிகிச்சையளித்த ஓமந்தூரார் மருத்துவமனை தங்களுக்கு இரண்டாவது வாழ்வை அளித்துள்ளதாக இந்த தம்பதியினர் நன்றி தெரிவித்து இருக்கிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon