--- --:--:-- --

30 நாள்கள் பரோல் வழங்கக் கோரி முதல்வருக்கு கடிதம்..!

5

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தமக்கும் தனது கணவர் முருகனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்குமாறு தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதான ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மகளிர் சிறையிலும், அவரது கணவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை மூலம் தமிழக முதல்வருக்கும் உள்துறை செயலருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

 

அதில் சென்னையில் வயது மூப்பினால் பாதிக்கப்பட்டுள்ள 81 வயது பத்மாவை சந்திக்கவும், தனது மாமனார் இறந்து ஓராண்டு ஆனதால் அதற்கான சடங்குகள் செய்யவும் 30 நாட்கள் பரோல் வழங்குமாறு கூறியிருக்கிறார். தமக்கும் தமது கணவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon