வெங்காயத்தின் விலை 200 கூட ஆகட்டும்.. உங்களுக்கு என்ன?
வெங்காயம் விலை 200 ரூபாய் ஆனால்தான் வெங்காயத்தை விளைவிப்பது எவ்வளவு கடினமான பணி என மக்களுக்கு தெரியும் என ஈஷா யோக நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
கோவையில் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் ஆறாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஜக்கி வாசுதேவ் இந்தியாவில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பிரச்சனை உள்ளது என்றும் சிறு சிறு நிலங்களாக இருப்பதால் உற்பத்தி செலவு அதிகமாகிறது எனவும் குறிப்பிட்டார்.

உலகத்திலேயே குறைந்த விலையில் உணவு கிடைப்பது நம்முடைய நாட்டில் தானென்றும் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெங்காயம் விதைத்த விவசாயி கடந்த எத்தனை வருடம் விலையில்லாமல் இருந்திருப்பார்கள் என கேள்வி எழுப்பிய ஜக்கிவாசுதேவ் வெங்காயம் விலை ஏறுகிறது என்று ஏன் கவலைப்படுகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.





