--- --:--:-- --

சினிமா பாடகிக்கு திடீர் மூச்சுத்திணறல்! மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

Latha KK

பிரபல திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், மூச்சு திணறல் காரணமாக, மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.

 

இசைக்குயில் என்று ரசிகர்களால் அழைப்படும் புகழ்பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர், இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் பாடியுள்ளார். கடந்த 65 ஆண்டுகளில், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அவர், செப்டம்பர் 28 அன்று தான், தமது 90வது பிறந்தநாளை கொண்டாடினார்.

 

மும்பையில் வசித்து வரும் லதா மங்கேஷ்கருக்கு இன்று அதிகாலை 1:30 மணியளவில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறனர்.

Leave a Reply

Right Menu Icon