மனித முக தோற்றத்தில் பிறந்த ஆட்டுக் குட்டி..!
குஜராத்தில் மனித முகத் தோற்றத்தில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தது. சுங்கத் பகுதியில் அஜய் பாய் என்ற விவசாயி வளர்த்து வந்த ஆடு இன்று குட்டி ஈன்று உள்ளது.
அந்த ஆட்டுக்குட்டியின் தலை அமைப்பும் மனிதர்களின் தலை அமைப்பைப் போலவே இருந்தது. கண்கள், வாய் ஆகியவையும் மனிதர்களுக்கு இருப்பது போல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பிறந்த சில நிமிடங்களிலேயே ஆட்டுக்குட்டி உயிரிழந்த நிலையில் விவசாய குடும்பத்தினர் வழிபாடு நடத்தி ஆட்டுக்குட்டியை அடக்கம் செய்தனர்.






