நடிகர் மகேஷ் பாபுவுக்கு முழங்காலில் அறுவை மருத்துவம்..!
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு முழங்காலில் அறுவை மருத்துவம் செய்யப் போவதாக தகவல் வெளியானது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபுவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து அவர் அமெரிக்கா சென்று அறுவை மருத்துவம் செய்து கொள்கிறார் என கூறப்படுகிறது. இதையடுத்து ஹைதராபாத்தில் சிகிச்சை பெறக் கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அறிந்த ரசிகர்கள், கெட் வெல் சூன் மகேஷ் அண்ணா என்ற ஹேஸ் டேக்கை ட்விட் செய்துவருகின்றனர்.
அவருக்கு நல்லபடியாக அறுவை மருத்துவம் நடக்க பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மகேஷ்பாபு நடித்து வந்த படத்தின் ஷூட்டிங்கை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





