ரஜினி படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
ரஜினிகாந்த், இயக்குனர் சிவா இணையும் புதிய திரைப்படத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். தர்பாரை தொடர்ந்து தனது 168 வது படத்தில் சிறுத்தை, வீரம், விசுவாசம் போன்ற பிளாக்பஸ்டர்களை இயக்கிய சிவாவுடன் கரம் கோர்க்கிறார் ரஜினிகாந்த்.
இதில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ரஜினிகாந்துடன் முதல்முறையாக பரோட்டா சூரியும், படையப்பா திரைப்படத்திற்கு பிறகு பிரகாஷ்ராஜும் இணைகின்றனர். விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட நாயகர்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் திரைப்படத்தில் நடித்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
தன் பயணத்தில் இந்த மைல்கல்லை எட்டிய இருப்பது மகிழ்ச்சி என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா, ரஜினிகாந்த் ஜோடியாக நெற்றிக்கண் படத்தில் நடித்திருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




