மூன்று ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி!
ஒடிசாவில் 72 வயது மூதாட்டி ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக கழிவறையில் வசித்துவரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் மையூர்பச் மாவட்டத்தை சேர்ந்த திரௌபதி என்ற பழங்குடியின மூதாட்டி தங்குவதற்கு வீடு இன்றி கழிவறையில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கணவனில்லாத அவருடன் மகனும், பேரனும் தங்கியிருக்கிறார்கள். அந்த சிறிய கழிவறைக்குள் தான் அவர்கள் சமையல் செய்கின்றனர். அரசு உறுதியளித்தபடி எப்படியும் தங்களுக்கு வீடு கட்டித் தரும் என்ற நம்பிக்கையில் அவர்கள் ஒவ்வொரு நாட்களையும் நம்பிக்கையுடன் கழித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக பேசிய உள்ளூர் அதிகாரி ஒருவர் அந்த மூதாட்டிக்கு வீடுகட்டி கொடுப்பதற்கான அதிகாரம் தனக்கு இல்லை எனவும், ஏதாவது திட்டத்தின் வீடு கிடைத்தால் அதை அவருக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




