கவின் கொலை வழக்கு – விசாரணையில் புதிய தகவல்
நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையில், காதலை கைவிட கூறி சுர்ஜித் உறவினர் ஜெயபால் கவினை தனியே அழைத்து மிரட்டல் விடுத்தது அம்பலமாகி உள்ளது.
கவினை கயத்தாறு பகுதிக்கு வரவழைத்து காதலை கைவிடுமாறு மிரட்டியது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. கவின் கொலையில் சுர்ஜித்தின் தாயாருக்கு தொடர்பு உள்ளதா என சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






