--- --:--:-- --

கரூர் துயர சம்பவம்.. மேலும் ஒரு தவெக நிர்வாகி கைது..!

1

ரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு தவெக நிர்வாகியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செப்டம்பர் 27 ஆம் தேதி நாமக்கல்லைத் தொடர்ந்து கரூரில் பரப்புரை மேற்கொண்டார்.

 

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அதன்படி மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்.பி., பிரேமானந்தனை நியமித்து பொறுப்பு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து விசாரணை நடத்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. தவெக பொதுச்செயலாளர் ஆனந்தின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் கரூர் தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் மத்திய மாநகர தவெக செயலாளர் பவுன்ராஜை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கரூர் துயர சம்பவம் தொடர்பாக மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார் திவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Right Menu Icon