கன்னியாகுமரி – காஷ்மீருக்கு ரயில்.. ரயில்வே அசத்தல் திட்டம்
தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு நேரடி ரயில் கிடையாது. சாலை மார்க்கமோ, விமானம் மூலமாகவோதான் செல்ல முடியும். இந்த குறையை போக்க கன்னியாகுமரி (அ) ராமேஸ்வரத்தில் இருந்து காஷ்மீருக்கு 4,000 கி.மீ. தூரம், அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ஏப்ரலில் கட்ரா-பனிஹால் இடையே ரயில் விடப்படவுள்ளது. இது வெற்றிகரமானால், இத்திட்டம் சாத்தியமாகும் என தெற்கு ரயில்வே கருதுகிறது.





