ஆட்டோ ஓட்டுனர்களின் குறைகளை கேட்டறிந்த கமல்ஹாசன்..!
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் வாக்கு சேகரித்தார். கோவை ரயில் நிலையம் பகுதிக்கு சென்ற கமல்ஹாசன் ரயில் நிலையத்தை பார்வையிட்டார்.
பின்னர் அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்தவர்களுடன் கலந்துரையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர்களது குறைகளை கேட்டறிந்த கமல்ஹாசன் தான் வெற்றி பெற்றபெற்றவுடன் குறைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.






