இந்திய மண்ணின் வாசனை இருக்க வேண்டும்
இது பண்டிகைக் காலம்; சுதேசி பொருட்களின் மந்திரத்தை நீங்கள் தொடர்ந்து சொல்ல வேண்டும். 140 கோடி இந்தியர்களும் எதை வாங்கினாலும் அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எதை வாங்கினாலும் அதன் உற்பத்திக்குப் பின்னால் ஒரு இந்தியரின் வியர்வை இருக்க வேண்டும். நீங்கள் எதை வாங்கினாலும் அது இந்திய மண்ணின் வாசனையுடன் இருக்க வேண்டும்.
நாம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கும்போது, நமது பணம் நாட்டிற்குள் இருக்கும். அந்தப் பணத்தை சாலைகள், பள்ளிகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்கள் கட்டுவதற்கும் ஏழைகள் மற்றும் விதவை தாய்மார்களுக்கும் உதவுவதற்கும் பயன்படுத்தலாம். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.






