--- --:--:-- --

அளவுக்கு மீறிய கடனால் குடும்பமே உயிரிழந்த பரிதாபம்..!

8

கேரளாவில் அளவுக்கு மீறிய கடன் வாங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் குடும்பத்துடன் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே இருப்பவர் ரமேஷ்.

 

இவருக்கு சுஜாதா என்பவர் உடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ரமேஷ் வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருந்ததாகவும் கடனை உடனடியாக கட்டவில்லை என்றால் வீட்டினை ஜப்தி செய்ய உள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதனால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ் திரும்பி வந்து மனைவி மற்றும் மகள் ரேஷ்மாவுடன் சேர்ந்த தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon