--- --:--:-- --

தமிழகத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்துள்ளது..!

4

மிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் இன்று பல இடங்களில் மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, மாங்காடு, நெடுவாசல், கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது.

 

ஆலங்குடியில் கொத்தமங்கலம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி, பரம்பிரியம், ஆதிரங்கம், வேலூர் நெடும்பலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை நீடித்தது.

 

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, திருப்பூண்டி, பொய்கைநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தற்போது வரும் தருவாயில் இருப்பதால் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

 

சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மீதேறி, கொளத்தூர், நங்கவள்ளி, ஜலகண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து குளிர்வித்தது. நீலகிரி மாவட்டம் உதகை நகர் பகுதியில் ஷேர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளிலும் குன்னூரில் ஒட்டுப்பட்டரை, அருவங்காடு, வண்டிசோலை போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

 

ஆறு மாதங்களுக்குப் பிறகு தற்போது பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மழையால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் . முதுமலை புலிகள் காப்பக பகுதியில் நீர்வீழ்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Leave a Reply

Right Menu Icon