--- --:--:-- --

இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்.. காஸாவை விட்டு வெளியேறும் மக்கள்..!

4

காசா மீது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதோடு, பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

 

அதுமுதல், ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல், காசாவிலிருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என கூறியது.இந்நிலையில், பலர் காஸாவிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

 

இதனிடையே கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இன்று (திங்கள்கிழமை) நடைபெறும் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக்குழு கூட்டத்தில், பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளன.

Right Menu Icon