குக் வித் கோமாளி மணிமேகலையா இது..!
விஜய் டிவி புகழ் மணிமேகலையின் குழந்தை பருவ போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.சன் ம்யூசிக் சேனலில் தொகுப்பாளராக ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் மணிமேகலை. அவர் அதற்கு பிறகு விஜய் டிவிக்கு தொகுப்பாளராக வந்த நிலையில், குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாகவும் பங்கேற்க ஆரம்பித்தார்.
தற்போது அந்த ஷோவில் முக்கிய நட்சத்திரமாக அவர் மாறி இருக்கிறார். சின்னத்திரையில் அவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் குக் வித் கோமாளி மூலமாக கிடைத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மணிமேகலை இன்ஸ்டாகிராமில் அவரது குழந்தை பருவ போட்டோஸ் சிலவற்றை பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.





