--- --:--:-- --

மது போதையில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியான கணவன்..!

20

சென்னை பல்லாவரம் அருகே மது போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட கணவர் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார். திரிசூலம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார்.

 

இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. மது போதைக்கு அடிமையான சுரேஷ் தினமும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தல்லாவரம் காவல் நிலையத்தில் ஏழு முறை மனைவி புகார் அளித்ததால் சுரேஷை போலீசார் கண்டித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் மீண்டும் மது போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டிருந்தபொழுது வீட்டின் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்தது. சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon