போதையில் போலீசை எட்டி உதைத்த இளம்பெண் ..!
மகாராஷ்டிராவில் தலைக்கேறிய போதையில் இளம்பெண் ஒருவர் தலை கால் புரியாமல் நடுரோட்டில் போலீசாரிடம் வம்பிழுத்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த பெண் போலீசாரை கெட்ட வார்த்தையால் திட்டி மாணவரை காலால் எட்டி உதைத்து சட்டை காலரை பிடித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார். போலீசார் அணிந்திருந்த முக கவசத்தையும் அந்தப்பெண் கழற்றி வீசினார்.
ஆனால் பொறுமை காத்த போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தி உள்ளார். இந்த காட்சியை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து அந்த பெண்ணை கண்டித்து வருகின்றன.



