--- --:--:-- --

என் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார் : நடிகை மகாலட்சுமியின் கணவர் அனில் விளக்கம்

2

சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் குடும்ப பிரச்சினையால் தன் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பபடுவதாகவும் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ தமக்கு தங்கை போன்றவர் என்றும் நடிகை மகாலட்சுமியின் கணவர் அணில் விளக்கமளித்துள்ளார்.

 

சின்னத்திரை நடிகர் ஜெயஸ்ரீ அவரது கணவர் ஈஸ்வர் இடையே சமீபத்தில் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஈஸ்வர் மீது அவரது மனைவி ஜெயஸ்ரீ போலீசாரிடம் புகார் அளித்தார். மேலும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியுடன் ஈஸ்வர் தொடர்பு வைத்திருப்பதாகவும், தம்மை கணவர் ஈஸ்வர் கொடுமைபடுத்துவதாகவும் ஜெயஸ்ரீ குற்றம்சாட்டியிருந்தார்.

 

இது தொடர்பாக இவரை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். தனக்கும், மகாலட்சுமிக்கும் தவறான தொடர்பு இருப்பதாக ஜெயஸ்ரீ அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டிய ஈஸ்வர் ஜெயஸ்ரீக்கும், மகாலட்சுமியின் கணவருக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றம் சாட்டினார்.

 

சின்னத்திரை நட்சத்திர தம்பதியர் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ள நிலையில், மகாலட்சுமியின் கணவர் அனில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஈஸ்வர் தமது நெடுங்கால நண்பர் எனவும், அவர் மனைவி ஜெயஸ்ரீ தனக்கு தங்கை போன்றவர் எனவும் விளக்கமளித்தார்.

 

தீபாவளியன்று ஜெயஸ்ரீயுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தவறாக சித்தரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மகாலட்சுமியை பின்னாலிருந்து யாராவது இயக்குகிறார்களா என தெரியவில்லை எனக் கூறிய அனில் ஜூன் மாதத்திற்கு பிறகு மகாலட்சுமி தம்முடன் இல்லை என்றும் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon