--- --:--:-- --

கோவையில் மனித கை கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் வெளியான தகவல்..!

5

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் மனித கை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாய் ஒன்று கையை எடுத்துச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், அந்த கை திருப்பூரைச் சேர்ந்த இளைஞருடையது என்பது தெரியவந்துள்ளது.

 

 

சூலூர், கள்ளபாளையம் பகுதியில் சுதாகர் என்பவருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தின் ஸ்டோர் ரூம் அருகே மனித வலது கை கிடப்பதாக நிறுவன மேலாளர் வைரவநாதன் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சுதாகர் உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் புகார்ளித்தார்.

 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சூலூர் காவல்துறையினர், கண்டெடுக்கப்பட்ட கையின் உரிமையாளர் யார், அது அங்கு எப்படி வந்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையின் விசாரணையில், அந்த கை திருப்பூரைச் சேர்ந்த அழகுபாண்டி என்பவருடையது என்பது தெரியவந்தது.

 

அழகுபாண்டி, தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகத் தண்டவாளத்தில் கை மற்றும் கால்களை வைத்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதில் அவரது வலது கை துண்டானதுடன், கால்களிலும் படுகாயங்கள் ஏற்பட்டன. தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அழகுபாண்டியின் சிதைந்த உடல் பாகங்கள் கள்ளப்பாளையத்தில் உள்ள உயிரியல் மருத்துவக் கழிவு தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அப்போது, அங்கு வந்த நாய், துண்டான கையை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த சுதாகரின் நிறுவன வளாகத்தில் போட்டுவிட்டுச் சென்றது.

 

 

இந்தச் சம்பவம் நிறுவனத்தின் சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி, இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கள்ளபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Right Menu Icon