--- --:--:-- --

போன முறை கமலுடன் கூட்டணி.. இந்த முறை ரஜினியுடனா..? கட்சி தொடங்கும் முன்பே முதல் ஆளாக “துண்டு” போட்ட செ.கு.தமிழரசன்!!

rdfged

கடந்த ஆண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுபன் கூட்டணி வைத்த இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், இன்று ரஜினியை சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசியல் கட்சி தொடங்கி 2021 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளதாக ரஜினி கூறி 3 ஆண்டுகள் கடந்து விட்டன.

 

ஆனால் ரஜினிதான் கட்சி தொடங்கிய பாடில்லை. கடந்த வாரம் தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ரஜினி திடீரென கூட்டினார். இதனால் கட்சிப் பெயர் குறித்து அறிவிக்கப் போகிறார் என்ற பரபரப்பு எழுந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி தொடங்குவது பற்றியும் ஆலோசித்த ரஜினி, அதற்கு முன்னதாக எடுக்க உள்ள முக்கிய நடவடிக்கைகள், தனது திட்டங்கள் குறித்து நிர்வாகிகளிடம் விவாதித்ததாக கூறப்படுகிறது.

 

இதில் முக்கியமாக தான் கட்சியின் தலைவராக மட்டுமே இருப்பேன்.
முதல்வர் பதவி உள்ளிட்ட முக்கிய அமைச்சர் பதவியை திறமை, அனுபவம் வாய்ந்த நபர்களை முன்னிறுத்தப் போவதாக கூறியுள்ளார். அது மட்டுமின்றி கட்சிப் பொறுப்புக்கு வருபவர்கள் சம்பாதிக்கும் எண்ணத்தில் இருக்கக் கூடாது.

 

அப்படி யாரும் நினைத்தால் கட்சிக்கு வேண்டாம் என எச்சரித்த ரஜினி, எம்எல்ஏ பதவிக்கும் இளைஞர்களை முன்னிறுத்தப் போவதாகவும், மன்ற நிர்வாகிகள் இந்தப் பதவியை எதிர்பார்க்கக் கூடாது என்றெல்லாம் ரஜினி கடுமை காட்டியதாக கூறப்பிடுகிறது. இதனால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதனால் தான் கூட்டம் முடிந்த பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந் தித்த ரஜினி, தமக்கு தனிப்பட்ட முறையில் ஒரு விஷயத்தில் திருப்தியில்லை; ஏமாற்றம் தான் என சஸ்பென்ஸ் வைத்த ரஜினி என்ன ஏமாற்றம் என்பதை காலம் வரும் போது கூறுகிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ரஜினியை, இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் இன்று சந்தித்தது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா இருந்த போது அதிமுகவுடன் கூட்டணி கண்டு எம்எல்ஏ ஆனவர் செ.கு.தமிழரசன். தலித் கட்சி தலைவரான தமிழரசன், அரசியலில் நன்கு தெளிவானவர். சட்டப்பேரவையிலும் இவரது செயல்பாடுகளை ஜெயலலிதா பாராட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி தர செ.கு.தமிழரசனை அடிக்கடி பயன்படுத்தியவர் ஜெயலலிதா.

 

இதனால் ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்த உடனே, கடந்த 2018-ல் ரஜினியை சந்தித்து பல முறை முக்கிய ஆலோசனை நடத்தினார் செ.கு.தமிழரசன். ஆனால் ரஜினி கட்சி தொடங்காததால் கமலுடன் கூட்டணி கண்டார். கடந்த 2019-ல் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஒரு எம்.பி. மற்றும் 3 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி போட்டியிட்டது.

 

இந்நிலையில், ரஜினி கட்சி தொடங்கும் மும்முரத்தில் உள்ள நிலையில், அவரை செ.கு.தமிழரசன் இன்று சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார். ரஜினியும் கட்சி ஆரம்பித்தால் கூட்டணியில் சில கட்சிகளை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், அரசியல் அனுபவம் மிக்க சில மாற்றுக் கட்சி தலைவர்களை உடன் வைத்துக் கொள்ளவும் திட்டம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஜினி – செ.கு.தமிழரசன் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon