இந்தியாவில் அதிகரித்துக் கொண்டு செல்லும் கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கொரொனா பாதிப்பின் எண்ணிக்கை நேற்று இரவு 2,704 ஆக இருந்தது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மேலும் 25 பேருக்கும், கோவாவில் மேலும் ஒருவருக்கும், மத்திய பிரதேச மாநிலத்தில்மேலும் 10 பேருக்கும் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களையும் சேர்த்து நாட்டில் புதிதாக 98 பேருக்கு புற்றுநோய் உறுதியானதாக எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்து உள்ளது. இதில் வெளிநாட்டினர் 57 பேரும் அடங்குவர். கொரொனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 423 பேருக்கு உறுதியாகியுள்ளது.
மூன்றாம் இடத்தில் உள்ள டெல்லியில் 386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரொனாவுக்கு 68 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்த அதிகபட்சமாக குஜராத்தில் 9 பேரும், தெலுங்கானாவில் 7 பேரும் கொரொனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சையில் 684 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 42 பேரும், கேரளாவில் 41 பேரும் கொரொனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.






