தங்கையின் காதலனை அடித்தே கொன்ற அண்ணன்..!
தங்கையை பார்க்க வந்த காதலனை காதலியின் அண்ணன் அடித்துக் கொன்ற சம்பவம் புதுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் நல்லையா. 23 வயதான இவர் கோவையில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
நல்லையா தனது வீட்டின் அருகே உள்ள ஜான்சி என்ற பெண்ணை ஐந்து வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் காதலுக்கு பெண்ணின் அண்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதற்கிடையே தனது தங்கையிடம் பேசுவதை தவிர்க்குமாறு நல்லையாவிடவும் பலமுறை பிரபு கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது. ஜோதிட பேசுவதற்காக அவரது வீட்டிற்கு நல்லையா வந்துள்ளார். வீட்டு மாடியில் நல்லையாவும், ஜான்சியும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த பிரபு ஆத்திரமடைந்து தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது அருகில் இருந்த கட்டையை எடுத்து தலையில் பிரபு அடிக்கவும் நல்லையா மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து பரிசோதித்ததில் நல்லையா இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பிரபுவை கைது செய்த திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆத்திரத்தில் தங்கையின் காதலனை அண்ணன் அடித்துக் கொன்ற விபரீதம் திருக்கோகர்ணம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






