--- --:--:-- --

சோசியல் மீடியாவில் பிரபலமான நரிக்குறவர் இன அஸ்வினி அதிரடி கைது..!

7

மூக வலைதளங்களில் வைரல் வீடியோக்கள் மூலம் பிரபலமான நரிக்குறவர் அஸ்வினி கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி. நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண்மணி சமூக வலைதள மூலம் வைரலானார். அவர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அஸ்வினி வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவரது கோரிக்கைகளை நிறைவேற்றினார்.

 

அஸ்வினி மீது பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் நடந்தன. சிலர் தங்களை மிரட்டுவதாக அஸ்வினி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த நதியா என்ற பெண்ணுக்கும் அஸ்வினிக்கும் முன்பகை இருந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று இரவு இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

பின்னர் கைகலப்பாக மாறியதால் நதியாவின் கையில் அஸ்வினி பேனா கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்த புகார் அடிப்படையில் வழக்கை மாவட்ட போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon