வேலூரில் தூய்மை பணியாளர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு..!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக பேரானாம்பட்டு பகுதியில் பணியாற்றி வந்த அவர் சில காரணங்களுக்காக வார்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த பணி மாற்றம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகம் எதிரே அவர் சாலை மறியலில் ஈடுபட்டார். பின் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து நிகழ்ந்த காவல்துறையினர் அந்த நபரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





