புதுச்சேரியில் 24 மணிநேரத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று..!
புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு 45 பேர், காரைக்காலில் ஆறுபேர், ஏனாமில் 3 பேர் என மொத்தம் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 950 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 844 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




