--- --:--:-- --

பள்ளிவாசல்களில் 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்

12

அவினாசி, பூண்டி, அனுப்பர்பாளையம், 15.வேலம்பாளையம்,ஸ்ரீ நகர் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில்
71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்.

 

திருப்பூர் அடுத்துள்ள அவினாசி மஸ்ஜிதே நூர் யக்கீன் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் 71 வது குடியரசு தின விழா பள்ளிவாசல் வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு மஸ்ஜிதே நூர் யக்கீன் சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அவிநாசி தம்பியண்ணன் ஜுவல்லரி சையத் முஹம்மது தலைமை தாங்கினார். நிர்வாகி சித்திக் முன்னிலை வகித்தார். பள்ளிவாசல் ஹஜ்ரத் மன்சூர் அலி இம்தாதி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

 

பின்னர் மதநல்லிணக்க சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் அவிநாசி சட்டமன்ற தொகுதி தலைவர் முஹம்மது முஸ்தபா, காங்கிரஸ் கட்சியின் சிறுபாண்மைபிரிவு தலைவர் சதாம் உசைன், தி.மு.க சிறுபாண்மை பிரிவு செயலாளர் பரக்கத் உள்பட அவினாசி பகுதி இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் அனைவர்க்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதேபோல் திருமுருகன்பூண்டி மஸ்ஜிதே நபவி பள்ளிவாசலில் நடத்த குடியரசு தின விழாவுக்கு பள்ளிவாசல் தலைவர் மாலிக் பாட்சா தலைமை தாங்கினார். பொருளாளர் அஷ்ரப் அலி வரவேற்றார். பள்ளிவாசல் ஹஜ்ரத் அப்துல் வகாப் இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள் வரலாறு குறித்து பேசினார் பள்ளிவாசல் முன்னாள் தலைவர் அனிஷ் ஹாஜியார் தேசியக்கொடியை ஏற்றினார். விழாவில் மதரஸா மாணவர்கள் அப்பகுதி முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது.

 

அதேபோல் அனுப்பர்பாளையம்புதூர் மஸ்ஜிதே சித்திக் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலில் நடந்த குடியரசு தின விழாவில் பள்ளிவாசல் ஹஜ்ரத் கலீல் அஹமது தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். விழாவில் பள்ளிவாசல் தலைவர் முபாரக், செயலாளர் அன்வர் பாட்சா மதரஸா மாணவர்கள் அப்பகுதி இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

அதேபோல் 15 வேலம்பாளையம் மஸ்ஜிதே இஸ்லாம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் மற்றும் மதரசா சார்பில் நடந்த குடியரசு தின விழாவில் பள்ளிவாசல் ஹஜ்ரத் பிர்தவ்ஸ் இம்தாதி தேசிய கொடியை ஏற்றிவைத்தார். விழாவில் பள்ளிவாசல் தலைவர் முபாரக், செயலாளர் இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருப்பூர், ஸ்ரீ நகர் பகுதியில் உள்ள மஸ்ஜிதே மதினா சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் 71 வது குடியரசு தினவிழா நடந்தது. விழாவுக்கு த மு மு க மாவட்ட துணைச் செயலாளர் சபீர்தின் தலைமை தாங்கினார். பள்ளிவாசல் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பள்ளிவாசல் தலைவர் நூர்தீன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பள்ளிவாசல் துணைத்தலைவர் அப்துல் கரீம் வரவேற்றார். முடிவில் பள்ளிவாசல் செயலாளர் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.

 

இவ்விழாவில் தமுமுக வின் மாவட்ட நிர்வாகிகள்., 9,15,16 வது வார்டு தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், மற்றும் அப்பகுதி பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். மேலும் சுதந்திரப் போராட்டத்தின்போது இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறித்து பொதுமக்களுக்கு நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. மர்மக்காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவருக்கும் ஆம்புலன்ஸ் மூலம் வீடு வீடாகச் சென்று நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon