--- --:--:-- --

கேரளாவில் சவர்மா சாப்பிட்டு இளைஞர் உயிரிழந்த விவகாரம்..!

17

கேரளாவில் சவர்மா சாப்பிட்டு இளைஞர் உயிரிழந்த அதே நாளில் சம்பந்தப்பட்ட உணவகத்தின் உணவருந்திய மேலும் 6 பேருக்கு உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 23 வயதாகும் ராகுல் பாப்பநாட்டில் உள்ள ஹோட்டலில் ஆன்லைன் மூலம் சவர்மா வாங்கி சாப்பிட்டு பின்னர் உடல் நலம் பாதித்த மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் செய்து வைத்து உணவு மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினார்.

 

இந்த நிலையில் ஷவர்மா சாப்பிட்டு இளைஞர் உயிரிழந்த அதே நாளில் அந்த உணவகத்தில் சாப்பிட்ட 6 பேருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பாக ஆறு பேரிடமும் சுகாதாரத் துறையினர் விசாரித்த நிலையில் உடல் நலம் தேறி வருவதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த ராகுலின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

Right Menu Icon