பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு வெளியான முக்கிய அறிவிப்பு..!
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான போட்டி தேர்வு பிப்ரவரி 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 2600 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்து அதற்கான போட்டி தேர்வு வரும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.
இதற்கு 47 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் திடீரென தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு காரணமாக தேர்வை தள்ளி வைக்க விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட ஆசிரியர் தேர்வு வாரியம் ஜனவரி 7ஆம் தேதி நடைபெற இருந்த போட்டி தேர்வு பிப்ரவரி நான்காம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட் பிப்ரவரியில் நடைபெறும் தேர்வுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருக்கிறது.





