மாற்றுத்திறனாளிகளுக்கு தனது இசையில் பாட வாய்ப்பளிக்கும் இமான்..!
மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனுக்கு தனது இசையில் பாட இசையமைப்பாளர் டி இமான் வாய்ப்பளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இமான் கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஆதித்யா சுரேஷ் என்பவரை பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் பாட வைத்திருக்கிறார். இந்த பாடலில் அவருடன் சஹானா என்ற சிறுமியும் பாடுவதாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
ஏற்கனவே திருமூர்த்தி என்கிற மாற்றுத்திறனாளி கலைஞருக்கு அவரது இசையில் பாட டி இமான் வாய்ப்பளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.






