--- --:--:-- --

மகாகவி பாரதியின் தீவிர பக்தரான இளசை மணியன் காலமானார்..!

6.1

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த பாரதி ஆய்வாளரும், எழுத்தாளருமான இளசை மணியன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. மகாகவி பாரதியாரின் தீவிர பக்தராக திகழ்ந்த இளசை மணியன் நேற்று இரவு உடல்நலக்குறைவால் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. மறைந்த இளசை மணியன் எட்டயபுரம் பாரதி நினைவாலயத்தில் காப்பாளராக இருந்தவர். இவருடைய இயற்பெயர் ராமசுப்பிரமணியன். 1942 ஆம் ஆண்டு பிறந்த இளசை மணியன் கொல்கத்தா காப்பகத்திற்கு சென்று பாரதியின் இந்தியா இதழில் உள்ள அரிய தகவல்களை தொகுத்து பாரதி தரிசனம் என்ற நூலை கொண்டு வந்தார்.

 

கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பாரதி பிறந்த நாளன்று எட்டையபுரத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாரதி ஆய்வாளர்கள், இளசை மணியனுக்கு மகாகவி பாரதி விருதை வழங்கி கவுரவித்தார்.

Leave a Reply

Right Menu Icon