இ பதிவு செய்திருந்தால் கொடைக்கானலுக்குள் செல்ல அனுமதி..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருபவர்கள் இ பதிவு செய்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று சோதித்த பின்னரே அனுமதிக்கின்றனர். மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.







