இறுதி மூச்சு வரை போராடி அடுத்த முறையும் பாஜகவை கொண்டு வருவேன்..!
கர்நாடகாவில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக பாடுபடுவேன் என முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தனது நிறைவுரையை ஆற்றினார்.
அப்பொழுது மாநில தேர்தலில் இனி போட்டியிட மாட்டேன் என்றும் தனது இறுதி மூச்சு வரை கட்சிக்காக பாடுபடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் தேர்தலில் போட்டியிடாமல் இருந்தாலும் கர்நாடகாவில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதாக பாடுபடுவேன் என கூறியுள்ளார்.
மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்த தனது முயற்சி மேற்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.





