டிப்பர் லாரி மோதியதில் கணவன், மனைவி பலி..!
தர்மபுரியில் திருமண நிகழ்வுக்கு சென்ற கணவன் மனைவி மீது டிப்பர் லாரி மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியாகினர். புஷ்பராஜ் மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டனர். டிப்பர் லாரியின் சக்கரத்தில் புஷ்பராஜும், அவரது மனைவியும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த கோர விபத்தில் லாரி ஓட்டுனர் அதிவேகமாக வந்ததே காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.







