இ பதிவு செய்வது எப்படி..?
தமிழகத்தில் மாவட்டத்திற்கு உள்ளேயும் மாவட்டத்திற்கு இடையிலும் பயணிக்க இன்று முதலில் இ பதிவு முறை கட்டாயமாக்கியுள்ளது. ஊரடங்கு காலத்தில் பயணிக்க இபதிவு முறை கட்டாயம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அது அம்பலமாகியுள்ளது.
திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியவர்களுக்கான தேவையான அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதள பக்கத்திற்கு சென்று தங்களுடைய கைபேசி எண்ணை குறிப்பிட்டு காப்சா எண்ணையையும் பதிவு செய்ய வேண்டும். பின்னர் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஓடிடி வரும். பதிவு செய்த உடனே பதிவு பக்கம் திறக்கும்.
அதில் பயண தேதி பயணம் செய்பவர்களின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு பயணத்திற்கான காரணம் மற்றும் எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என பதிவு செய்ய பயணத்திற்கான காரணத்திற்கு உரிய ஆவணங்களையும் ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினால் பயணம் செல்ல அனுமதி வழங்கப்படும்.






